கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மறைவு — அதிர்ச்சியளிக்கிறது என ஸ்டாலின் இரங்கல்
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு மறைவெய்திய செய்தி வருத்தமளிப்பதாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சுவாசக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று பிற்பகல் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை: கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு மறைவெய்திய செய்தி வருத்தமளிப்பதாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சுவாசக் கோளாறு காரணமாக நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பாபு, இன்று (நவ. 19) பிற்பகல் 2.24 மணிக்கு மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் தமது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் அவர் தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வில் அடிமட்டத் தொண்டராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய பாபு, 2006-ஆம் ஆண்டு புரசைவாக்கம் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றார். பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்த அவர், 2026 பிப்ரவரியில் த.வெ.க.வில் சேர்ந்து, அதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அவரது மறைவால் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி காலியாகியுள்ளது.
தமது இரங்கல் செய்தியில் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியைப் பகிருங்கள்
தொடர்புடைய கட்டுரைகள்

கோவை பெரியார் அறிவுலகம் நூல் கொள்முதல் முறைகேடு — வழக்குப்பதிவு செய்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் பரந்தாமன் மனு
கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி, தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளர் இ. பரந்தாமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனு மீதான விசாரணையை நீதிபதி வி. லட்சுமிநாராயணன் நவம்பர் 23-ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
· 1 நிமிட வாசிப்பு

தவெக ஆட்சியில் வைஸ் சிட்டி ஆகும் தமிழ்நாடு! — சென்னையில் ₹700 கோடி ஹெராயின் பறிமுதல் குறித்து ஸ்டாலின் கண்டனம்
சென்னையில் ₹700 கோடி மதிப்பிலான ஹெராயினை ஒன்றிய வருவாய்ப் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டுக்குள் நடக்கும் இவ்வளவு பெரிய போதைப் பொருள் நடமாட்டத்தை மாநிலக் காவல்துறையால் ஏன் பிடிக்க முடியவில்லை என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க அமைக்கப்பட்ட 65 சிறப்பு அதிரடிப் படைகள் என்ன செய்கின்றன என்றும், உள்துறையை வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய் எப்போது பேசுவார் என்றும் அவர் கேட்டுள்ளார்.
· 1 நிமிட வாசிப்பு

சட்டம்-ஒழுங்கு தோல்வியை மறைக்க புள்ளிவிவரத்தின் பின் ஒளிந்துகொள்வதா? — டி.ஜி.பி. பேட்டியை கண்டித்த உதயநிதி
கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடுகையில், இந்த 6 மாத ஆட்சியில் கொலைகள் குறைந்துவிட்டதாக காவல்துறை டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் பெருமிதம் தெரிவித்திருப்பது உண்மை நிலையை மறைப்பதாக உள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் கண்டித்துள்ளார். தீபாவளி அன்று மட்டும் 17 உயிர்கள் பறிபோன நிலையில், கொலைகள் குறைந்துவிட்டதாகக் கூறுவது ஆறுதல் அல்ல, நிர்வாகத்தின் அவலம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
· 2 நிமிட வாசிப்பு

இது பாசிசமா, பாயாசமா? — டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆசிரியரின் பதிவுகள் நீக்கம்: மு.க. ஸ்டாலின் கேள்வி
த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆசிரியர் அருண் ராம் கட்டுரை எழுதியதைத் தொடர்ந்து, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்குப் பின்னணியில் தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவு இருக்கிறதா என்றும், யாருடைய உத்தரவினால் இது நடக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
· 1 நிமிட வாசிப்பு

