00:00 IST 27°C

திமுகவில் 110 மாவட்டங்களுக்கும் விரைவில் பொறுப்பாளர்கள் நியமனம்: உதயநிதி தலைமையிலான கூட்டத்தில் தீவிர ஆலோசனை

திமுகவில் விரைவில் 110 மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் இடைத்தேர்தலுக்கு முன்பாக உட்கட்சித் தேர்தலை நடத்தி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எழுதியவர் திராவிடன் செய்திப் பிரிவு

· 1 நிமிட வாசிப்பு

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பறிகொடுத்த நிலையில், கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில் திமுகவில் மறுசீரமைப்புக் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர் தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து, அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையாகச் சமர்ப்பித்தனர். அதன் அடிப்படையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில், திமுக கட்சி மாவட்டங்களின் எண்ணிக்கை 110-ஆக உயர்த்தப்படுகிறது என்றும், மாவட்டச் செயலாளரின் அதிகபட்ச வயது 70-ஆக நிர்ணயிக்கப்படுகிறது என்றும், ஒரு மாவட்டச் செயலாளர் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே அந்தப் பொறுப்பில் இருக்க முடியும் என்றும் உள்ளிட்ட பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், திமுக தலைமை அலுவலகத்தில் நேற்று மறுசீரமைப்புக் குழுவினருடன் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதில், அடுத்ததாக வரவிருக்கும் இடைத்தேர்தலுக்கு முன்பாக திமுக உட்கட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து திமுக வட்டாரங்கள் கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் திமுக தொண்டர்களைச் சோர்வடையச் செய்திருந்தன. அதன் பிறகு ஆளுங்கட்சியினர் எங்கள் தலைவர்களைக் கைது செய்ததும், கடுமையான விமர்சனங்களை முன்வைத்து போன்றவை தொண்டர்களிடத்தில் புதிய உத்வேகத்தைக் கொடுத்தன. இதனால் திமுகவினர் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் கடுமையாகப் பணியாற்றினர். அதன் வெளிப்பாடுதான் இடைத்தேர்தலில் மிகவும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றது. இன்னும் சற்றுக் கூடுதலாக உழைத்தால் நிச்சயம் தவெகவை வீழ்த்திவிடலாம் என்ற நம்பிக்கை திமுக தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இப்படியான சூழலில்தான் விரைவில் உட்கட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து திமுக மறுசீரமைப்புக் குழுவினருடன் உதயநிதி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, மாவட்டச் செயலாளர்களுக்கான வயது வரம்பை ஐந்து ஆண்டுகள் உயர்த்த வேண்டும் எனச் சில மாவட்டச் செயலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என மறுசீரமைப்புக் குழுவினர் உதயநிதியிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்துப் பேசிய உதயநிதி, விரைவில் உட்கட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், அதற்கு முன்பு மாவட்டப் பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்றும், விரைவில் ஒன்றியம், பேரூர், வட்டம், பகுதி என வாரியாகப் பிரித்து திமுக தலைமைக்கு அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதில் தவறுகள் ஏதும் இருக்கும் பட்சத்தில், அவை சரிசெய்யப்படும் என்றும், இடைத்தேர்தலுக்கு முன்பாகவே இந்த உட்கட்சித் தேர்தலை நடத்தி முடித்து, திமுக தன்னுடைய அனைத்து உட்கட்சிப் பணிகளையும் நிறைவு செய்து இடைத்தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என்றும், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்றும் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

AMP

தொடர்புடைய கட்டுரைகள்

மு.க. ஸ்டாலின்
அரசியல்

கேள்விகளுக்குப் பதிலளிப்பதே நல்லாட்சி: கலையரசனுக்கு ஸ்டாலின் வாழ்த்து, அத்துமீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிக்கை

போலி முகவரியில் இடம்பெற்ற கருத்தைக் காரணம் காட்டி அதிகாலையில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பேராசிரியர் கலையரசன், தமக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பி வெளிவந்திருப்பதற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிர்வாகத்தை உருவாக்குவதே நல்லாட்சி என்றும், விமர்சனங்களைக் கருத்துகளால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர காவல்துறை நடவடிக்கைகளால் அல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சதியில் ஈடுபட்டவர்களைக் கண்டறிவதோடு, அத்துமீறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு அவர் நினைவூட்டியுள்ளார்.

· 1 நிமிட வாசிப்பு

மு.க. ஸ்டாலின்
அரசியல்

தி.மு.க. தலைவர் குறித்து கேலி, கிண்டல் பதிவு — த.வெ.க. தகவல் தொழில்நுட்ப அணி மீது சென்னை காவல் ஆணையரிடம் தி.மு.க. புகார்

த.வெ.க. அரசைக் கண்டித்து இன்று (31-10-2026) தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. மகளிர் அணி சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் காணொலி பதிவின் வாயிலாக அழைப்பு விடுத்திருந்தார். அதனை த.வெ.க.வின் அதிகாரபூர்வ தகவல் தொழில்நுட்ப அணியின் சமூக வலைத்தளத்தில் கேலியும் கிண்டலும் செய்யும் வகையில் விஷமத்தனமான கருத்துகளை பதிவேற்றம் செய்து, ஸ்டாலினின் புகழுக்கும் பெயருக்கும் களங்கம் விளைவித்ததாகக் கண்டித்து, தி.மு.க. சார்பில் இன்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

· 1 நிமிட வாசிப்பு

உதயநிதி ஸ்டாலின்
அரசியல்

கோவை மத்தியச் சிறையில் இருந்தும் கைதி தப்பியோட்டம் — பொம்மை முதலமைச்சரின் ஆட்சி லட்சணம் இது என உதயநிதி சாடல்

புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டு, கைதிகள் இன்கி பிங்கி பாங்கி போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு ஆட்சி நடப்பதாகவும், இந்த மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

· 1 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டுப் பெண்களின் வேக்-அப் காலுக்குச் செவிசாய்க்க வேண்டும் — மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
அரசியல்

தமிழ்நாட்டுப் பெண்களின் வேக்-அப் காலுக்குச் செவிசாய்க்க வேண்டும் — மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழ்நாடெங்கும் இன்று தி.மு.க. மகளிர் அணியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சி சார்பற்ற மகளிரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாகவும், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த அவர்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்பது அரசின் கடமை என்றும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

· 1 நிமிட வாசிப்பு