திருத்தணியில் கொடூரம்: மகளை காதலிக்க வற்புறுத்திய இளைஞர்கள் மீது புகார் - தந்தை வெட்டிக் கொலை!
மகளை காதலிக்க வற்புறுத்திய இளைஞர்கள் மீது புகார் அளித்த தந்தை வெட்டிக் கொலை - இருவர் கைது.
திருத்தணி: பெரியார் நகரில் +2 படிக்கும் தனது மகளைக் காதலிக்க வற்புறுத்திய இரு இளைஞர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த தந்தை யுவராஜ் (45), அதே இளைஞர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்த யுவராஜ் (45), தனது மகள் +2 படித்து வரும் நிலையில், அவரை சஞ்சய், லாரன்ஸ் ஆகிய இரு இளைஞர்கள் காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், யுவராஜை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சஞ்சய் மற்றும் லாரன்ஸ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகார் அளித்த தந்தையே கொலை செய்யப்பட்ட இந்தக் கொடூரச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வி எழுந்துள்ளது. (தகவல்: சன் நியூஸ்)