அரசியல்

அருள் விக்னேஷை இன்னமும் பாதுகாப்பது ஏன்? — இது ஆட்சியா, அலங்கோல சிண்டிகேட்டா என பொம்மை முதல்வரை உதயநிதி கடும் விமர்சனம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத செய்தி அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை பொம்மை முதலமைச்சர் இன்னமும் பாதுகாப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கோரிக்கை வைத்தவரை அடித்துத் துன்புறுத்திய துணை சபாநாயகர் மீதும் நடவடிக்கை இல்லை என்றும், இது ஆட்சியா அல்லது த.வெ.க.வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல சிண்டிகேட்டா என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

எழுதியவர் திராவிடன் செய்திப் பிரிவு · · 1 நிமிட வாசிப்பு

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத செய்தி அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை இந்த பொம்மை முதலமைச்சர் இன்னமும் பாதுகாப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோரிக்கை வைத்தவரை அடித்துத் துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது ஆட்சியா, இல்லை த.வெ.க.வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல சிண்டிகேட்டா என்றும் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொம்மை முதலமைச்சருக்குத் துணிச்சல் இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆனால் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம், த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமாக டைவர்ஷன் அரசியலில் இறங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆலோசனைக் கூட்டத்தில் அனல் கக்கினார், அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று ஆன்லைன் மாஃபியாவையும், பணம் கொடுத்து வைத்திருக்கும் பேரில்லாப் பிச்சைகளையும் வைத்து ரீல்ஸ் ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மவுன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் தன் கட்சிக்காரர்களைக் கட்டி வைக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மக்கள் சக்தி தட்டி வைக்கும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமது எக்ஸ் பக்கத்தில் இந்தக் கண்டனத்தை உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

முழுப் பதிப்பைக் காண்க