தி.மு.க. தலைவர் குறித்து கேலி, கிண்டல் பதிவு — த.வெ.க. தகவல் தொழில்நுட்ப அணி மீது சென்னை காவல் ஆணையரிடம் தி.மு.க. புகார்
த.வெ.க. அரசைக் கண்டித்து இன்று (31-10-2026) தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. மகளிர் அணி சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் காணொலி பதிவின் வாயிலாக அழைப்பு விடுத்திருந்தார். அதனை த.வெ.க.வின் அதிகாரபூர்வ தகவல் தொழில்நுட்ப அணியின் சமூக வலைத்தளத்தில் கேலியும் கிண்டலும் செய்யும் வகையில் விஷமத்தனமான கருத்துகளை பதிவேற்றம் செய்து, ஸ்டாலினின் புகழுக்கும் பெயருக்கும் களங்கம் விளைவித்ததாகக் கண்டித்து, தி.மு.க. சார்பில் இன்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: த.வெ.க. அரசைக் கண்டித்து இன்று (31-10-2026) தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. மகளிர் அணி சார்பில் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தி.மு.க.வினருக்கும் பொது மக்களுக்கும் காணொலி பதிவின் வாயிலாக அழைப்பு விடுத்திருந்தார்.
அந்த அழைப்பை த.வெ.க.வின் அதிகாரபூர்வ தகவல் தொழில்நுட்ப அணியின் சமூக வலைத்தளத்தில் கேலியும் கிண்டலும் செய்யும் வகையில் விஷமத்தனமான கருத்துகளை பதிவேற்றம் செய்து, தி.மு.க. தலைவரின் புகழுக்கும் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் வெளியிட்டதாக தி.மு.க. கண்டித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தி.மு.க. சார்பில் இன்று (31-10-2026) சென்னை பெருநகர காவல்துறை ஆணையரிடம், தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இ. பரந்தாமன் புகார் மனு அளித்துள்ளார். புகார் மனுவின் விவரம் தி.மு.க. செய்திக் குறிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.