"வேக்-அப் கால்": மகளிர் அணி ஆர்ப்பாட்டம் த.வெ.க. அரசுக்கு எச்சரிக்கை என ஸ்டாலின்
சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம் ஒழுங்கைச் சீரழித்துவிட்ட சோப்ளாங்கி த.வெ.க. அரசு என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் விமர்சித்துள்ளார். நாளை தி.மு.க. மகளிர் அணி நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம், தறிகெட்டு ஓடும் த.வெ.க. அரசுக்கான வேக்-அப் கால் என்றும் அவர் கூறியுள்ளார்.
சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம் ஒழுங்கைச் சீரழித்துவிட்ட சோப்ளாங்கி த.வெ.க. அரசு என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து, தி.மு.க. மகளிர் அணி சார்பில் நாளை அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம், தறிகெட்டு ஓடும் த.வெ.க. அரசுக்கான வேக்-அப் கால் என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், முதலமைச்சரையும் தூங்கி வழியும் ஆட்சி நிர்வாகத்தையும் எழுப்ப முயற்சிப்போம் என்றும், ஆளத் தெரியாத அரசுக்குப் பாடம் புகட்டுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.